Thursday, December 3, 2015

அவள் Network Busy

என்னுள் உன்னை மட்டும் Upload செய்தேன் TeraBytes ல்
உன்னிடம் என்னை  Download செய்ய முயன்றேன்
Network Busy என்று Notification வருகிறது


Thursday, November 5, 2015

மனித இணையம்

ஆதிவாசிகள்  குகைக்குள் வரைந்த Wall painting
அது அந்த கால social நெட்வொர்க் தான்
தெருவெல்லாம் சுவரொட்டி ஒட்டி விளம்பரம் தேடினதும்
இப்ப டிஜிட்டல் banner அடித்து  தன் கருத்தை  சொல்லுறதும்
கடந்த கால சமுக வலையமைப்பு தான்

fb Wall போஸ்ட்ல hashtag போட்டு Trending பண்ணுறதும்
instagramla instant செல்பி போட்டு <3 ♥ வாங்குறதும்
Sanpchatல தன் நிலையை expose பண்றதும்
whats app ல மத்தவங்க dp status last activity பாக்குறதும்

 புது fashion இல்ல மாமு
அது சங்க கால பழசு

இருந்தபோதும்
இப்பொழுது இணையத்தில்
உலகை நாடாக மடித்து
வீட்டின் பைக்குள்
சுருக்கி வைத்து கொண்டோம்
கையடக்க கருவியாக

மக்கள் தொடர்பியலில் பெருமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது
அனால்
மனித மனங்கள் மட்டும் இன்னும் மாறவே இல்லை




Wednesday, November 4, 2015

Angle லவ் Axis



அவளுக்கு தான் Quadrilateral லவ் ஸ்டோரி
எனக்கு வெறும் single லவ் ஸ்டோரி தான்
ஒரே straight லைன் மட்டும் தான்
and there இஸ் நோ equal & opposite  லைன்
கேவலம் single லவ் ஸ்டோரிக்கே நான் worth இல்ல
இதுல Triangle லவ் ஸ்டோரிக்கு நா எங்க போக ?

Friday, October 23, 2015

மேகி ஆண்களின் காதல்

மேற்க்கத்திய நாடுகளில்
நல்ல குணமுடைய பெண்களை
ஆண்கள் கரம் பிடிப்பார்கள்

இந்திய நாட்டில்
நல்ல அழகான பெண்ணை
ஆண்கள் தேடுவார்கள்
கிடைக்காத பட்ச்சத்தில்
கிடைத்த பெண்ணை கரம்  பிடிப்பார்கள்

இவர்கள் கன்னி பெண்களை மட்டுமே நாடுவார்கள்
அவர்கள் எந்த பெண்ணையும் தேர்ந் தெடுப்பார்கள்

அவர்களிடம் இருப்பதுவோ சமத்துவ நோக்கம்
இவர்களிடம் இருப்பதுவோ   கொடூர சிந்தனைகளின் தாக்கம்

(மேகி = மேற்கு கிழக்கு)
(இதுவும் கால மாற்றத்துக்கு உட்பட்டது)
Salena Gomez

Wednesday, October 21, 2015

மேகி பெண்களின் காதல்

மேற்கு உலகில்
எழுத்தாளனையும் கவிஞனையும்
கரம் பிடிக்க பெண்கள் தவம் கிடப்பார்கள்

இந்தியாவில்
இன்ஜினியரையும் டாக்டரையும்
கரம் பிடிக்க பெண்கள் அடம்பிடிப்பார்கள்

அவர்களும் பெண்கள் தான்
இவர்களும் பெண்கள் தான்

இவர்களிடம் இருப்பது தீர்க்க நோக்கம்
அவர்களிடம் இருப்பது காதலின் தாக்கம்

(மேகி =மேற்கு கிழக்கு )

(இது கால மாற்றத்துக்கு உட்பட்டது)


Friday, September 18, 2015

தமிழ்நாட்டு கட்சிகள்

ஆர்யா கட்சி ...............
திராவிட கட்சி ...........
தமிழ் தேசியம் கட்சி ...........
தமிழர் கட்சி ..........
மேல் ஜாதி கட்சி.............
கிழ் ஜாதி கட்சி...............
ஊர் கட்சி ...........
தெரு கட்சி................
வீட்டுல இருக்குறவன் ஆளுக்கு ஒரு கட்சி.


Saturday, September 12, 2015

கார்பரேட் பார்வை

வேறு பணிக்கு முன்னேறி செல்லாமல்
ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள்
குப்பை கொட்டுபவனும்
திறமையற்றவனே

தனக்கு திறமை இருப்பது போல்
நடிப்பவன்
பிழைக்க தெரிந்தவனே

சொல்லும் வேலையை மட்டும் செய்பவன்
செயல்லற்றவனே

மேல் அதிகாரிக்கு பெருமை சேர்ப்பவன்
துதி பாடுபவனே

பயிற்சி காலத்தில்
தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறி ஓடுபவன்
ஏமாந்தவனே

இங்கே கற்றுக்கொண்டு விட்டோடி
வேறு நிறுவனத்தை நிறுவுகிறவன்
திறமையானவனே

ஒன்றும் தெரியாமல்
நேர்காணல் வருகிறவனே
தகுதியானவனே




Sunday, August 2, 2015

அணு கதிர்

அணு ஆராய்ச்சி
அணு உலை
அணு ஆயுதம்
அணு கழிவு

அணு கதிர் வீச்சு
புற்று நோய்
கொடிய மரணம்

அணுக்கள் சாதித்ததை விட இந்த உலகை சோதித்ததுதான் அதிகம்

மாசு
காற்று
மழை
நீர்
நிலம்
பயிர்
செடி
கொடி
மரம்
பூச்சிகள்
பறவைகள்
விலங்குகள்
மனிதன்
மனிதம்

அணு அணுவாய் நம்மை கொல்லும்
அணுக்கள் அற்ற உலகை படைத்திடுவோம்
இயற்கையோடு ஒண்டி வாழ்ந்திடுவோம்.



Friday, July 17, 2015

எழுத்து பிழைகளுடன்

திடிர்னு ஞானனோதயம் பிறக்கும்
அது எந்த தளத்துல வேணும்னாலும் பிரதிபலிக்கும் .
மிக கேவலமாக.........
என் கருத்தென்னும் வடிவில் .......எழுத்து பிழைகளுடன் ...

Link : https://goo.gl/9gb9eS



Tuesday, July 14, 2015

Start up

U.S, Windows ,IBM,Intel னு ஓடி போற மூளை
அடிமை குணமுடைய மூளை
இது எதற்கும் உருப்படாது
சொன்னதை சொல்லும்
சொல்வதை செய்யும்

உருவாக்கும் மூளை
ஊரங்கிகிடக்குது
வங்கிகள் வாசலில்
ப்ராஜெக்ட் பைலை
கை யில் ஏந்தி
Start up க்காக

பிரெஷேர்ஸ் (Freshers) காதல்

 பிரெஷேர்ஸ் (Freshers) காதல்  Fb Twitter Linkedin profile பாத்துதான் வருது
காமம் Outing போகும் தூரம் இடம் பொறுத்துதான் வருது
கல்யாணம் விசாரணை விவாகரத்து என்றுதான் தொடங்குகிறது.

இங்கு 
கல்யாணம் வேறு காமம் வேறு காதல் வேறு
இடை இடையே கருகலைப்புகள் வேறு.



Wednesday, July 1, 2015

மேலே போடும் கணக்கு

நீ கீழ் கணக்கு போடுறதுக்குள்ளே Plusல
உனக்கு மேல்கணக்கு போட்டுடுவாங்க Minusல

Thursday, June 25, 2015

கர்பரேட் வாழ்க்கை

நேரத்துக்கும் தூக்கத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்டேன்
கணினிமுன் கண்கள் அயராமல் காலம் கழிக்கிறேன்

காங்கிரிட் குளிர் சாதன அறைக்குள்
பனிக்கட்டியாய் கரைகிறேன்
பணி பழுவின்நிமித்தம்


Thursday, May 14, 2015

செட்டில்

எதுலையும் செட்டில் ஆகாத மனம்
லைப் ல மட்டும் செட்டில் ஆகணும்னு விரும்புது

Wednesday, May 6, 2015

Dubsmash

Dubsmash

இந்த பாட்ஷா ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்ன மாதுரி

Replay

இந்த பாட்ஷா ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்ன மாதுரி

WhatsApp Share
Facebook Share
Youtube Share

Like Comment Share

அதான் அதேதான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

Dubsmash

Tuesday, May 5, 2015

திறன்பேசி


என் தொடுதலின் கோணத்தை உணர்வீகள் உள்வாங்கிகொண்டன
எண்ணற்ற செயலிகள்
என் எண்ணங்களை பிரதிபலிகின்றன

தொடுதிரைக்குள் அங்காடி திறக்கின்றன
தொடாமலே தேடல் நடக்கின்றன
திக்கற்று திரிவோருக்கு (திசைகாட்டி) வழி காட்டுகின்றன
சமுக வலைதளங்களுக்குள் மக்களை ஒன்றிணைக்கின்றன

iPhone செயலிகள் Apple Store
Android செயலிகள் Google Play Store
Windows செயலிகள் Windows Store
BlackBerry செயலிகள் Blackberry World

என பட்டியல்
மென்பெட்டிக்குள் அடங்காமல் நீண்டு கொண்டே போகின்றன

அது அதன் திறன் பேசும் செயலிகள்
இந்த திறன்பேசி செயலிகள்

 (தொலைபேசி => கைபேசி => திறன்பேசி
Telephone => Mobile Phone => Smart Phone)


வாய்ப்பு

Celebrities பொதுமக்களை போல்
வாழ வழி தேடுகிறார்கள்

பொதுமக்கள் Celebritiesயை போல்
வாழ விரும்புகிறார்கள்

இருவருக்கும் இருக்கும் இடைவேளை
 "வாய்ப்பு"

Monday, May 4, 2015

தட்டச்சு

தட்டச்சு ஒழிந்திடும்
வாய்ஸ் Recognize வளர்ந்திடும்
Mind Reading
Artificial Intelligence  நிரந்தரமாகிடும்


Saturday, May 2, 2015

Techno உறவுகள்

Facebook ஆல் சேர்ந்த உறவுகள்
WhatsApp ஆல் பிரிந்துவிட்டன
மீண்டும் spy apps மூலம் ஒன்று சேர்ந்துவிட்டன