Friday, October 23, 2015

மேகி ஆண்களின் காதல்

மேற்க்கத்திய நாடுகளில்
நல்ல குணமுடைய பெண்களை
ஆண்கள் கரம் பிடிப்பார்கள்

இந்திய நாட்டில்
நல்ல அழகான பெண்ணை
ஆண்கள் தேடுவார்கள்
கிடைக்காத பட்ச்சத்தில்
கிடைத்த பெண்ணை கரம்  பிடிப்பார்கள்

இவர்கள் கன்னி பெண்களை மட்டுமே நாடுவார்கள்
அவர்கள் எந்த பெண்ணையும் தேர்ந் தெடுப்பார்கள்

அவர்களிடம் இருப்பதுவோ சமத்துவ நோக்கம்
இவர்களிடம் இருப்பதுவோ   கொடூர சிந்தனைகளின் தாக்கம்

(மேகி = மேற்கு கிழக்கு)
(இதுவும் கால மாற்றத்துக்கு உட்பட்டது)
Salena Gomez

Wednesday, October 21, 2015

மேகி பெண்களின் காதல்

மேற்கு உலகில்
எழுத்தாளனையும் கவிஞனையும்
கரம் பிடிக்க பெண்கள் தவம் கிடப்பார்கள்

இந்தியாவில்
இன்ஜினியரையும் டாக்டரையும்
கரம் பிடிக்க பெண்கள் அடம்பிடிப்பார்கள்

அவர்களும் பெண்கள் தான்
இவர்களும் பெண்கள் தான்

இவர்களிடம் இருப்பது தீர்க்க நோக்கம்
அவர்களிடம் இருப்பது காதலின் தாக்கம்

(மேகி =மேற்கு கிழக்கு )

(இது கால மாற்றத்துக்கு உட்பட்டது)