Saturday, September 12, 2015

கார்பரேட் பார்வை

வேறு பணிக்கு முன்னேறி செல்லாமல்
ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள்
குப்பை கொட்டுபவனும்
திறமையற்றவனே

தனக்கு திறமை இருப்பது போல்
நடிப்பவன்
பிழைக்க தெரிந்தவனே

சொல்லும் வேலையை மட்டும் செய்பவன்
செயல்லற்றவனே

மேல் அதிகாரிக்கு பெருமை சேர்ப்பவன்
துதி பாடுபவனே

பயிற்சி காலத்தில்
தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறி ஓடுபவன்
ஏமாந்தவனே

இங்கே கற்றுக்கொண்டு விட்டோடி
வேறு நிறுவனத்தை நிறுவுகிறவன்
திறமையானவனே

ஒன்றும் தெரியாமல்
நேர்காணல் வருகிறவனே
தகுதியானவனே




Sunday, August 2, 2015

அணு கதிர்

அணு ஆராய்ச்சி
அணு உலை
அணு ஆயுதம்
அணு கழிவு

அணு கதிர் வீச்சு
புற்று நோய்
கொடிய மரணம்

அணுக்கள் சாதித்ததை விட இந்த உலகை சோதித்ததுதான் அதிகம்

மாசு
காற்று
மழை
நீர்
நிலம்
பயிர்
செடி
கொடி
மரம்
பூச்சிகள்
பறவைகள்
விலங்குகள்
மனிதன்
மனிதம்

அணு அணுவாய் நம்மை கொல்லும்
அணுக்கள் அற்ற உலகை படைத்திடுவோம்
இயற்கையோடு ஒண்டி வாழ்ந்திடுவோம்.